வெடிபொருள் கடத்தல் ; 4 பேர் அதிரடி கைது!!

ஹரியானாவில் அதிக அளவில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இந்த 4 பேரும் சிக்கியதால் நாட்டின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு நடத்த திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது நாட்டு துப்பாக்கிகள் 3 இரும்பு கன்டெய்னர்களில் வெடிபொருட்கள் 31 வெடிமருந்துகள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் காரில் இருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருக்கும் அரவிந் சிங் என்ற தீரவிவாதியுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பாஸ்தானுக்கு ட்ரோன் மூலம் வெடிபொருட்கள் அனுப்பபட்டதாகவும் கூறினர்.

மேலும் தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் கொண்டுசேர்க்க பாக்கிஸ்தான் தீவிரவாதி கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் பிடிபட்ட நான்கு பேரிடம் முழு விசாரணை நடந்த பிறகு உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment