காலாவதியான குளிர்பானம்: இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம்! கடைக்கு சீல் வைத்து 80 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்!!

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைமை தான் நம் தமிழகத்தில் காணப்படுகிறது. சான்றிதழ் தொடங்கி தற்போது உணவு பொருட்கள் வரை பல கலப்படங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு ஹோட்டல் கடைகளிலும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வெளியானது.அதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் காலாவதியான குளிர்பானம் குடித்த 2 பேர் தற்போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலாவதியான குளிர்பானம் அருந்திய இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

பெரிய தண்டாவில் உள்ள மளிகை கடையில் காலாவதியான குளிர்பானம் விற்றது தெரியவந்தது. காலாவதியான 80 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment