Connect with us

காலாவதியான குளிர்பானங்கள்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு!!

500 sugarydrinks

தமிழகம்

காலாவதியான குளிர்பானங்கள்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு!!

காலாவதியான குளிர்பானங்கள்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சப்பளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் காலாவதியான குளிர்பானங்கள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது  கிடங்கில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குளிர்பானங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top