விலை உயர்ந்த மருந்து ஏழைகளுக்கு கிடைப்பதில்லை- ஐகோர்ட் வேதனை!

கோவை அரசு மருத்துவமனையில் மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்த முத்துமாலை ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

அதில் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது.

இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு: 47 குண்டுகள் துளைக்கப்பட்டது கண்டுபிடிப்பு!

அப்போது பேசிய நீதிபதி விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என வேதனை தெரிவித்தார்.

அப்போது புதிய நோய் பரவுவதற்கான காரணம், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதால் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

இதனை ஏற்ற நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி, அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் ஓய்வூதிய பலன் கோரிய வழக்கு நவம்பர் 4க்கு தள்ளிவைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment