எதிர்பார்த்திருந்த ஏழாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! காங்கிரஸுக்கு இட ஒதுக்கீடு?

நம் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வரிசை கட்டி அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். பலரும் எதிர்பார்த்திருந்த திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற போது அடுத்தடுத்து பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டது.

தற்போது வரை திமுக தனது 7ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி துவங்கியது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் 7வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 6 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடப்பங்கீடு உறுதியாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் மிகவும் முக்கியமான காங்கிரஸ் கட்சிக்கு இடஒதுக்கீடு செய்வதில் இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment