நீட் தேர்வில் இருந்து விலக்கு: புதிய சட்டம் இயற்ற திட்டம்

0879a63909791a0405a552d4cae4475a-1

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது 

ஏற்கனவே ஏகே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அந்த குழுவிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment