நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் : முதல்வர் அறிவிப்பு !!

இந்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளை தொடர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

பட்ஜெட் மீதான மானியக்கோரிகை கூட்டத்தொடர் தொடர்ந்த நிலையில் 2- வது அமர்வு இன்று மீண்டும் கூடியது. இதில் உயர்கல்வி, பள்ளி மானியக்கோரிக்கை  போன்ற விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது பேசிய முதல்வர் மாநிலத்தின் கல்வி உரிமைகள் மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். குறிப்பாக இளநிலை உள்ள படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு என்று அறிவித்து வருகின்ற 2022- 2023 ஆண்டு முதல் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இதனை எதிர்த்து  ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு 2022- 2023- ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல்  மத்திர அரசின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் பொதுநுழைவுத்தேர்வை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின்  மதிப்பெண்   அடிப்படையில் தேர்வுசெய்யாமல் பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசின் அறிவிப்பு கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment