என்னது இப்படி ஒரு பொங்கலா? ஆபரணங்களை தவிர்த்து, வெள்ளை சேலை மட்டும் கட்டி பொங்கல்!

பொங்கல் என்றாலே அனைவரும் உற்சாகத்தோடு காலையிலேயே பரபரப்பாக அலங்காரம் செய்து கொண்டிருப்பர். அதோடு காலையிலேயே பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டு மகிழ்வர். இந்த நிலையில் ஒரு கிராமத்தில் வெறும் வெள்ளை சேலை மட்டுமே கட்டி பெண்கள் பொங்கலிட்டது தமிழகத்தில் காட்டுத் தீ போல் வேகமாக பரவியது.

அதன்படி சிவகங்கை மாவட்டம் அருகே வெள்ளை சேலை கட்டி, மெட்டி, கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களை தவிர்த்து பெண்கள் பொங்கலிட்டனர். அதன்படி மதகுபட்டி மேலத் தெரு, கீழத்தெருவில் வசிக்கும் ஒரு சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் வெறும் வெள்ளை சேலை மட்டும் கட்டி ஆபரணங்களை தவிர்த்து பொங்கலிட்டனர்.

கிராம காவல் தேவதைகள் பச்சநாச்சி பிடாரி, பெண்ணழகி அம்மனை பெண்கள்  ஒன்றுகூடி வணங்கினர். ஏழைகள், செல்வந்தர் என வேறுபாடின்றி ஒரே நேரத்தில் பிடாரி அம்மன் கோவில் முன் கிராம பெண்கள் அனைவரும் பொங்கலிட்டனர். வெறும் துறவி போல சேலை கட்டி மட்டும் பெண்கள் பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடியது பலருக்கும் ஆச்சரியப்படத்தக்கதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment