தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களான நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு ஆகியவற்றை விஏஓ- விடம் விண்ணப்பித்தால் மட்டுமே பெற முடியும்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் மர்ம நபர்கள் ஒரு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். அதில் ஒவ்வொரு சான்றிதழ்களை பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க என அறிவிப்பு பலகை குறிப்பிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்த அறிவிப்பு பலகையில் ஒவ்வொரு சான்றிதழ்க்கும் எவ்வளவு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் இதனை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் மீறினால் போலீசில் புகார் அளிக்கப்படும் என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.
இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் படித்து விட்டு பின்னரே செல்வதாக தெரிகிறது. மேலும் லஞ்சம் வாங்குவதை தடிக்க அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் இதுபோன்ற தவறுகள் இன்னும் நடந்துகொண்டுதான் வருகிறது.