திமுக வட்டாரங்களில் பரபரப்பு!! முக்கிய புள்ளி பதவி விலகல்!!

கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திமுக மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக தனது துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்வதாக அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, திமுக அரசியலிருந்து ஒய்வு பெறுவதால் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே முதலமைச்சர் ஸ்டாலினிடம் விலகல் கடிதத்தை கட்சி தலைவருக்கு அனுப்பி விட்டதாகவும், அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் என கூறியுள்ளார்.

மேலும், 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இனி தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.