News
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே
பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பள்ளிகளில் உள்ள அனைத்து தேர்வுகளும், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்து ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர பிற பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்
தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யுஜிசி ஏஐசிடிஇ வழிகாட்டலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
