இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு ரத்து: உக்ரைன் அரசு அதிரடி !!

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதர தடைகளை விதித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். இதனிடையே போரினால் உக்ரைனில் பெரும் பொருளாதர பாதிப்பு அடைந்துள்ளது.

இதன் காரணமாக உக்ரைனில் படிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருந்தது. இதனிடையே நேற்று உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில்  உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வுவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இதனால் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இனி தங்களது கல்விக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என பெருமூச்சு விட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment