பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு: இந்த தேதியில் நடைபெறும்..

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நவம்பர், டிசம்பர் பருவ தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி தற்போது   தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சில பொறியியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுல்ளதால் இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கும், தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 2-ம் தேதிக்கும், பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 9-ம் தேதிக்கும், பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 10-ம் தேதி நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம்  என அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment