கொரோனா பரவல் காரணமாக சென்னை பல்கலையில் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வருகிறது . இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
டெல்டாவை போல் அதிக தாக்கத்தை இதுவரை இது கொடுக்கவில்லை என்ற போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு படியாக பல கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை பல்கலை.யில் ஜன.21 முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஜனவரி 20 வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 21-ம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.