முக்கிய அறிவிப்பு: முதுநிலை ஆசிரியருக்கான தேர்வு நாளை முதல் தொடக்கம்!
தற்போது உள்ள தமிழகத்தில் அனைத்து பதவிகளுக்கும் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் ஆசிரியர் தேர்வு நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகிறது.
அதன்படி முதுநிலை ஆசிரியருக்கான தேர்வு நாளை தொடங்குகிறது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுனர் நிலை 1 ஆகிய தேர்வுகள் நாளை தொடங்குகிறது.
தேர்வு நாளை முதல் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதி தேர்வு இருக்காது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அவரவர் சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பார்வை குறைபாடு, இரு கைகளும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு பதில் எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வுக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கு இத்தகை அறிவிப்பு பிரயோஜனம் உள்ளதாக அமைந்துள்ளது.
