அதிர்ச்சி!! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வஜிராபாத்தில் இம்ரான் கான் பேரணி நடத்தியதாக கூறப்படுகிறது.

அதாவது ஷேபாஸ் ஷெரீப் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “இஸ்லாமாபாத் பேரணி” நடத்தினர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 4 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment