சென்னை கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரை ரத்து செய்ய வேண்டுமென எஸ். பி வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது.
அப்போது எஸ்.பி வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் முகாந்திரம் இல்லை என்ற அறிக்கையின் வாயிலாக இத்தகைய வழக்கானது முடிக்க வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதே போல் இந்த வழக்கினை விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதே சமயம் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகள் மீது மாற்ற வேண்டும் என்றும் கூறியினார்.
இதனையடுத்து வழக்கினை தனி நீதிபதி முன் பட்டியலிடப்பட போவதில்லை என கூறிய நீதிபதிகள் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விசாரிக்கும் அமர்வில் மாற்றியதாக தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை நீட்டிப்பதாக கூறினார்.