எடப்பாடி தலைமையிலான அதிமுக முன்னாள் ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆர்.பி உதயக்குமார்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இவர். அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இவர் திமுகவினரை விமர்சிக்க தயங்குவதில்லை.
கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மற்றும் முதல்வரின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஒரு செங்கல்லை காண்பித்து பாருங்க ஒரு செங்கலோடு சரி மதுரையில் எய்ம்ஸ் கட்டவே இல்லை என பிரச்சாரம் செய்தார்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்,
எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை ‘‘ என்று தெரிவித்தார்.
மேலும் ஆன்லைன் பதிவால் தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்