Connect with us

பண மோசடியில் சிக்கும் மாஜி அமைச்சர்: ஐகோர்ட் அதிரடி!!

fraud

தமிழகம்

பண மோசடியில் சிக்கும் மாஜி அமைச்சர்: ஐகோர்ட் அதிரடி!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என்.சுப்பிரமணியன் மீதான புகாரை இரு வாரங்களில் விசாரித்து முடிவெடுக்க சேலம் மாநகர காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவைப் பொறுத்தவரையில் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதும், அதோடு ஊழல் புகார்கள் குறித்து குற்றச்சாட்டு முன்வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத் துறை சார்பாக இருந்த அமைச்சர் என்.சுப்பிரமணியன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் என்.சுப்பிரமணியன் மீதான புகாரை இரு வாரங்களில் விசாரித்து முடிவெடுக்குமாறு சேலம் மாநகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top