#Breaking முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நிலமோசடி தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் தனது 5 கோடி ரூபாய் நிலம் மற்றும் தொழிற்சாலையை ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் ஆகியோர் அபகரித்ததாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்தியகுற்றபிரிவு போலீஸார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கைது செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். தனது மருமகனுக்கும் அவரது சகோதரருக்கும் இடையேயான சொத்து பிரச்சனையில் தன் மீது மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment