ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு!

சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66,000 வாக்குகள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) பதவியேற்றார்.

பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் இபிஎஸ்- ஐ கண்டித்து பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டிகள்!

இளங்கோவன் முன்பு 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக சட்டப்பேரவைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.