பேரதிர்ச்சி!! காங்கிரஸ் முக்கிய புள்ளியின் மகன் திடீர் மரணம்; சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார். இதை தொடர்ந்து ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

திருமகன் ஈவேராவிற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திருமகன் திடீர் உயிரிழப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.