Connect with us

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலையில்லாத உடலுக்கு சமம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

News

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலையில்லாத உடலுக்கு சமம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

9322d71583a6137df91ece88e3ddefb1-1

பெரும் பரபரப்புக்கு இடையே இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கூறிய ஒரு கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனால் கபில்சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பொங்கி எழுந்ததும் அதன் பின் திடீரென அவர்கள் பல்டி அடித்ததுமாஅ நாடகம் அரங்கேறியது

இந்த நிலையில் புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேரு குடும்பத்தின் வாரிசுகள் தான் காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்க வேண்டும் என்று மன்மோகன் சிங் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் கூறிவருகின்றனர்

இந்த நிலையில் நேரு குடும்பத்தின் வாரிசுகள் தலைமை ஏற்காத காங்கிரஸ் கட்சி தலையில்லாத முண்டமாக இருக்கும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top