ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக கலந்து சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து அதிமுக திமுக உட்பட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் போட்டியாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று காங்கிரஸ் தலைமை திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக தேர்வு செய்த காங்கிரஸ் மேல் இடத்திற்கு நன்றி என்றும் அதிமுக எத்தனை பிரிவாக இருந்து போட்டியிட்டாலும் நிச்சயம் நான் வெல்வேன் என்றும் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் சார்பில் பாஜக போட்டியிட்டாலும் தனக்கு கவலை இல்லை என்றும் கண்டிப்பாக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே வேட்பாளரை நிறுத்துவதில் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் பொது வேட்பாளராக பாஜக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று சீமான் கூறியிருந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை இன்று கமல்ஹாசன் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேமுதிக இந்த தேர்தல் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

evks

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews