Connect with us

தேர்தல் முடிவு: நல்லாட்சிக்கு மக்கள் அளித்த சான்று-வைகோ பாராட்டு!

வைகோ

தமிழகம்

தேர்தல் முடிவு: நல்லாட்சிக்கு மக்கள் அளித்த சான்று-வைகோ பாராட்டு!

தேர்தல் முடிவு: நல்லாட்சிக்கு மக்கள் அளித்த சான்று-வைகோ பாராட்டு!

ஒட்டுமொத்தமாக நேற்றைய தினம் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த ஆனந்தத்தோடு வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டு வருகின்றனர். அதிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக கட்சியின் கூட்டணி கட்சியான மதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதன்படி உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெற்றுள்ள வெற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்று என்று வைகோ பாராட்டியுள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாதத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றி காட்டி இருக்கிறது திமுக அரசு என்றும் வைகோ கூறினார். திமுக வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் அளித்துள்ள பேராதரவை காட்டுகிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.

தமிழ், தமிழர், தமிழ் நாட்டின் நலனுக்காக பாடுபடும் முதலமைச்சருக்கு உள்ளாட்சி தேர்தல் வெற்றி மிகவும் ஊக்கமாக அமையும் என்று வைகோ கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top