சென்னையில் எங்குபார்த்தாலும் மழைநீர் வெள்ளக்காடு போல உள்ளது!:சசிகலா;

கடந்த 2015 ஆம் ஆண்டு போல தற்போது சென்னை மாநகரம் காணப்படுகிறது. ஏனென்றால் 2015ல் பெய்த கனமழையால் சென்னை  மாநகரம் முழுவதும் மழை நீருக்குள் மூழ்கி தத்தளித்தது. அதுபோன்றுதான் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக காணப்படுகிறது. இதனால் அதிகாரிகள் பலரும் விரைந்து பணிகளை செய்து வருகின்றனர்.

சசிகலா

இருப்பினும் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பல இடங்களில் மழை நீர் வடிவதற்கு சிரமமாக காணப்படுகிறது.இதுகுறித்து சசிகலா தனது கருத்தை கூறியுள்ளார்.

அதன்படி மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொஞ்சம் கூட மழை நீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது என்றும் சசிகலா கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகள் வரை படத்தை காண்பித்து விளக்கம் கொடுப்பதிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள் என்று சசிகலா கூறியுள்ளார். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment