பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்-எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது அனைத்தும் அப்பட்டமான பொய்!: சக்கரபாணி
கடந்த வாரம் தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வரிசையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு சேர்த்து பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
அதேபோல் இந்தாண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் வெறும் பரிசு பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.பொங்கல் பரிசு தொகுப்பு பல இடங்களில் தரமற்றவையாக காணப்பட்டது. இதுகுறித்து தினம்தோறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி தக்க பதிலை அளித்துள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருள் வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ரூபாய் 500 கோடி ஊழல் என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் என்று அமைச்சர் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமாக வழங்க விலை புள்ளி கோரப்பட்டது என்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
