எல்லாம் சரி அப்படியே ஏழை மக்களுக்கு வீடு? ஆனால் இலவசம் எண்ணம் வரக்கூடாது!

நம் தமிழக இளைஞர்கள் மத்தியில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு அதிகமாக உள்ளது. ஏனென்றால் நம் தமிழகத்தில் பல மக்களிடம் வீடுகள் இல்லை என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.உயர்நீதிமன்றம்

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கூறியுள்ளது.அதன்படி வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறியுள்ளது. அதனால் மற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை ஹைகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு நிலத்தை வீட்டு மனையாக மாற்றி ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு நிலம்,வீடு வழங்கும் வகையில் நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் வீடுகள் இல்லாத நபர்கள் இல்லை என்று உருவாக அதிக வாய்ப்புள்ளதும்  தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment