ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைப்பு! விரைந்து புறப்பட்டார் ஸ்டாலின்!!

இன்று எதிர்பாராதவிதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 7 அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளதாகவும் மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

7 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

அதன்படி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக என ANI செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த தாகவும் கூறியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் அடையாளம் காண்பதில் மிகுந்த சிக்கலை போவதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் ராணுவ அதிகாரிகள் என்பதால் உரிய பரிசோதனைக்கு பிறகே விவரங்களை ராணுவம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் யார் யார் என்பதை மரபணு சோதனை மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதனை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குன்னூருக்கு விரைந்து புறப்பட்டு நேரில் ஆய்வு செய்ய தொடங்கிவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment