
தமிழகம்
குஷியோ குஷி!! 9-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி…
தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அண்மையில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. அதற்கு முன்னதாகவே 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வுகள் நடந்து முடிந்தது.
இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியாகுமா என கல்வித்துறை மத்தியில் எழுந்தது. இந்த சூழலில் 9-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதனால் மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
இதனிடையே 9-ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்களோ அல்லது தேர்வுக்கு முயற்ச்சி செய்திருக்கிறார்களோ அனைவரும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9ஆம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பட்டுள்ளது.
