News
சூர்யாவின் கல்விக் கொள்கைக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்- மன்சூர் அலிகான்
”ஜாக்பாட்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ஜெயலலிதாவை பார்த்து அமைச்சர்கள் பயப்படுவார்கள்.
அப்படியொரு உணர்வை ஜோதிகாவிடம் நான் பெற்றேன். அவரைப் பார்க்கும் போது ராஜராஜ சோழ மன்னன் போல கம்பீரமாக இருப்பார். இந்தப் படத்தில் எனக்கு புதுவிதமான அனுபவம் கிடைத்தது.

நிறைய கற்றுக் கொண்டேன். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. மிகப்பெரிய வெற்றி படமாக இது அமையும். நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை பற்றி பேசியது வரவேற்கத் தக்கது.
இதற்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். நானும் ஆதரவு தந்துள்ளேன். ஒவ்வொரு தமிழனும் ஆதரவு தர வேண்டும். நமது ஒட்டுமொத்த குரல் அரசின் காதுகளில் வலுவாக ஒலிக்க வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்று மன்சூர் அலிகான் வலியுறுத்தினார்.
இது சமூக வலைதளங்களில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
