பாலாஜியைத்தான் எல்லோரும் கேட்குறாங்க: ஓவர் பில்டப் செய்த சம்யுக்தா! !

b17428c10d5839935f220724a8179d1a-1

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சனம் ஷெட்டி, சம்யுக்தா, ஆஜித் வேல்முருகன் உள்பட ஒருசில வந்தனர். ஷிவானி சுரேஷ் மற்றும் அனிதா தவிர அனைவருமே தற்போது வீட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

சம்யுக்தா உள்ளே வந்தபோது அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கூறி பாலாஜி கண்கலங்கியது ஒரு நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. அதன் பின்னர் சம்யுக்தா நான் எந்த பேட்டிக்கு சென்றாலும் பாலாஜி பற்றி தான் கேட்கிறார்கள் என்றும் பாலாஜி வெளியில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றதாக பாலாஜிக்கு நான் சப்போர்ட் செய்ததாக எல்லோரும் கேட்கிறார்கள் என்றும் பில்டப் செய்து கூறினார். அப்போது பாலா உள்ளுக்குள்ளே பெருமை அடைந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் தப்பி தவறி கூட ஆரி குறித்து எதுவுமே சம்யுக்தா சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ebf6a3e18dab47f54c526b6ab0be655e

அப்போது ரம்யா, ஆரி-பாலாஜி சண்டை நடந்தபோது அந்த சண்டை மேலும் முற்றிவிட கூடாது என்பதற்காக நான் பாலாவை சமாதானம் செய்தேன். ஆனால் அதை வைத்து என்னை பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறிவிட்டனர் என்று ஆதங்கத்துடன் கூறினார். மொத்தத்தில் நேற்றைய சம்யுக்தாவின் வரவு பாலாஜிக்கு மிகப்பெரிய பூஸ்ட்டை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.