இனி ஒவ்வொரு வாரமும்! டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையத்தில் புகாரின் விசாரணை தன்மையானது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக பொதுமக்கள் நேரடியாக உயர் அதிகாரியை சந்திக்க முடியாக சூழல் நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: நாகை மீனவர்கள் 11 பேர் கைது..!!!

இந்நிலையில் காவல்துறையை பொறுத்தவரையில் காவல் கண்காணிப்பாளர்கள், பெரு நகரங்களை பொறுத்த வரையில் காவல் ஆணையர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனு மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 3 மணி வரையில் பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் பொதுமக்களை சந்தித்து குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என தமிழக டிஜிபி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

திமுக நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு..!!

மேலும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.