இன்று இந்தியாவிற்கே பெரும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி உக்ரைன்நாட்டில் உள்ள இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் உக்ரேன் கார்கிவ் பகுதியில் இருந்து ரயிலில் வெளியேறும் போது குண்டு தாக்கி உயிர் இழந்துள்ளார். மாணவர் நவீனின் உயிரிழப்பை வெளியுறவுத் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதனால் அவரது குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல்காந்தி நவீன் சேகரப்பா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அவர், உக்ரேனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது என்று கூறியுள்ளார். இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க சிறந்த திட்டமிடல் தேவை என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உக்ரேனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.