Connect with us

இனி அடிக்கும் ஒவ்வொரு பாலும் சிக்ஸர்தான்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு

News

இனி அடிக்கும் ஒவ்வொரு பாலும் சிக்ஸர்தான்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு

afa53a4ecfcc25d5376df4b61996af49

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேற்று முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். ஆலந்தூரில் தொடங்கிய பிரச்சாரத்தை அவர் மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இடையிடையே அவர் மெட்ரோ ரயிலில் சென்றார் என்பதும் ரயில் பயணிகளிடம் அவர் வாக்கு சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசிய கமல், ‘தன்னை விலைக்கு வாங்க முயற்சி செய்து பார்த்தார்கள் என்றும் ஆனால் தான் விலை போகவில்லை என்றும் கூறினார்

b6e5645aefe922133a065f13f0e26609

ஸ்கோர் செய்வது குறித்து கூறிய கமல்ஹாசன் இதுவரை  எப்படி ஆடினேன் என பார்க்காதீர்கள், இனி ஒவ்வொரு நாளும் சிக்சர் தான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தன்னுடைய கூட்டணிக்கு வருபவர்கள் இனியும் தாமதிக்க வேண்டாம் என்றும் மூன்று நாட்களுக்குள் தன்னுடைய கூட்டணிக்கு வர விரும்புவர்கள் வர வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் 

மேலும் மிக விரைவில் கமலஹாசன் தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top