Connect with us

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு..!!!

school students

தமிழகம்

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு..!!!

நம் தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பொது தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. அதுவும் குறிப்பாக இந்த கல்வியாண்டில் தான் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 10, 12 ஆகிய வகுப்பு மாணவர்களின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியானது. இதில் பெரும்பாலான தேர்ச்சி விகிதத்தை பெற்று முதல் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் திகழ்த்திக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் படிப்பினை உன்னிப்பாக கவனித்து பள்ளி கல்வி ஆணையர் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவினை அனுப்பி உள்ளார். பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top