விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் அடுத்தடுத்து 3 படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, இந்த படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.
பாலிவுட்டில் வெற்றி கொடியை நாட்ட தயாரான அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் அவரது ராசியான நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் வசித்து வருகிறார் அட்லி.

அஜித் பிறந்தநாள் மே 1 இல்லையா?… இது என்ன புது டுவிஸ்ட்!!..
பிரபல இயக்குனர் சி.எஸ்.அமுதனின் ட்விட்டரில் பக்கத்தல் ரசிகர் ஒருவர் ‘தமிழில் proper ஆக ரீமேக் செய்யப்பட்ட படம் எது’ என கேட்டிருக்கிறார். ரசிகரின் அந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் மெர்சல் என கூறி, அட்லியை பங்காக கலாய்த்துள்ளார்.
இயக்குநரின் இந்த பதிலைப்பார்த்த ரசிகர்கள் என்னது, மெர்சல் ரீமேக் செய்யப்பட்ட படமா என, இருந்தாலும் அட்லியை இப்படி கிண்டலடித்து இருக்கக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
இயக்குநர் சி.எஸ்.அமுதன்,மி ர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் , தமிழ் படம் 2.0 திரைப்படத்தை இயக்கி உள்ளார்.தற்போது, விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் “ரத்தம்”படத்தை இயக்கி வருகிறார். கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிவரும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்