பல கோடி கொடுத்தாலும் பழைய அணியே போதும்! 2 புதிய அணிக்கு டாட்டா சொன்ன 2 வீரர்கள்!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு 10 அணிகள் களம் இறங்க உள்ளன. இதனால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன்படி  ஒவ்வொரு அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது.

ஜடேஜா

இந்த நிலையில் பல கோடிகள் கொடுத்தாலும் தங்களது அணியை விட்டு திரும்ப மாட்டோம் என்ற வீரர்களின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அகமதாபாத் 20 கோடிக்கு ஏலத்தில் எடுப்பதாக கூறியிருந்தது.

இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தன்னை 16 கோடிக்கு தருவதாக கூறி வந்ததால் அதற்கு ஒப்புக்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் விளையாட உள்ளார். இதனால் பணத்தை விட அணி முக்கியம் என்ற ஜடேஜாவின் செயல் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

சிராஜ்
 

இதனைப் போன்றே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பதாக லக்னோ அணி கூறி இருந்தது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெறும் 7 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்வதாக கூறி இருந்தது. இதற்கு ஒப்புக்கொண்டு முகமது சிராஜ் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் இவ்விரு வீரர்களும் அதிக பணம் கொடுத்தாலும் தங்கள் அணியை விட்டு திரும்ப மனதில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment