திரை சினிமாவிலேயே மிகவும் கம்பீரமாக இருந்தார் கேப்டன் விஜயகாந்த். அவரின் ஒவ்வொரு படத்திலும் வரும் கருத்துக்களும் பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களையும் மக்களையும் மெய்சிலிர்க்க வைக்கும். மேலும் அவர் திரை சினிமாவில் வெற்றிக்குப் பின்னர் அரசியலில் களம் இறங்கினார். அவர் இறங்கிய முதல் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சியினர் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் அவர் அதிமுக கூட்டணியில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் கேப்டன் விஜயகாந்த் இருந்தார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணியுடன் களம் இறங்கி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது .இந்நிலையில் தற்போது இந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியோடு களமிறங்கி அனைத்து தொகுதிகளிலும் குறைவான வாக்குகளைப் பெற்று மிகுந்த தோல்வியடைந்துள்ளது .
இந்நிலையில் திரைத்துறையில் இருந்து வந்த பலரும் அரசியலில் தோல்வியடைந்துள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இவர்கள் மத்தியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெற்றி பெற்ற கையோடு பல அரசியல் முன்னணி தலைவர்கள் அனைவரிடமும் வாழ்த்து பெற்று வருகிறார். தற்போது தன் கட்சியுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் அரசியலில் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் தற்போது தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேரில் சந்தித்து அவருக்கு வணக்கம் வைத்து அவர் இடம் பெற்றுள்ளார். அதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.
தேமுதிக தலைவர், திரையுலகின் மூத்தவர் அண்ணன் @iVijayakant அவர்களை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தேன். கழகத்தின் வெற்றிக்காகவும் – எனது வெற்றிக்காகவும் அன்போடு வாழ்த்திய அண்ணன் அவர்களுக்கு அன்பும், நன்றியும். #PremalathaVijayakant @lksudhish @vj_1312 pic.twitter.com/NbimFNeSzb
— Udhay (@Udhaystalin) May 4, 2021