தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் எந்த திரைப்படமும் இயக்காமல் இருந்த நிலையில் இந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு ராசியான ஆண்டாக மாறியுள்ளது
ஏற்கனவே சாணிக் காகிதம் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பதும் அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவர் தனுஷ் நடிப்பில் இரண்டு திரைப்படங்களை இயக்க உள்ளார் என்பதும் அதில் ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கும் பிரமாண்டமான திரைப்படம் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 படத்தின் படப்பிடிப்பையும் அவர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் செல்வராகவன் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது: ஒரு சிறிய ரகசியம் சொல்கிறேன்! உள்ளம் உடைந்து நொறுங்கினாலும், உலகம் நம்மை சுக்கு நூறாய் கிழித்தாலும் முகம்கழுவி,உடைகளையும் காலணிகளையும் அணிந்து வேலைக்கு போய் விடுவோம் ! கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் … எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் !