தமிழக அரசே தடுத்தாலும் அணைகட்டுவது உறுதி: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம் !!

மேகதாதுவில் அணை கட்டும் பணி தொடர்பாக கர்நாடகா அரசு நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் அணை கட்டும் திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருரில் கர்நாடக மாநில நீர்ப்பாசனதுறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் கூறியதாவது:

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணிக்காக வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இதற்கு தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து அதனை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என கர்நாடக மாநில நீர்ப்பாசனதுறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே  கர்நாடகாவில் தண்ணீர் உற்பத்தியாவதும் கர்நாடகாவில் அணை கட்டுவதும் , காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்காமல் போனால் மட்டுமே நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நடந்து கொள்வதாக அர்த்தமாகும் என கூறியுள்ளார்.

மேலும், அணை கட்டுவதற்கான திட்ட வரைவு கடந்த 2012 மற்றும் 2028ம் ஆண்டுகளில் தயாரித்து ஒன்றிய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சகத்தின் அனிமதி கிடைத்தவுடன் தமிழக அரசு தடுத்தாலும் அணை கட்டப்படும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment