Connect with us

ஆளும் கூட்டணியில் இருந்தாலும், அணு உலையை எதிர்ப்பேன்… தில்லாக நிக்கும் திருமா

thirumavalavan e1663219167325

தமிழகம்

ஆளும் கூட்டணியில் இருந்தாலும், அணு உலையை எதிர்ப்பேன்… தில்லாக நிக்கும் திருமா

மதுரை அவனியாபுரத்தில்சிறுத்தைகளின் முதல் பாய்ச்சல்மாவீரன் மலைச்சாமி போராட்ட வரலாறு நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்  வெளியிட்டார்.

மதுரை அவனியாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியில் சார்பில்சிறுத்தைகளின் முதல்பாய்ச்சல் “DPI நிறுவனர் மலைச்சாமி நினைவு நாளான இன்று நடைபெற்றது. அவனியாபுரத்தில் உள்ள   மலைச்சாமி அரங்கத்தில் உள்ள அவரின் திருஉருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்திருமாவளவன் அவர்கள் மலரஞ்சலி செலுத்தி பின்னர் தெற்கு மாவட்டச் செயளாளர் இன்குலாப் எழுதிய சிறுத்தைகளின் முதல் பாய்ச்சல்மாவீரன் மலைச்சாமி போராட்ட வரலாறுநூல் வெளியீட்டு விழா வில் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் முதல் பாய்ச் சல் நூலை வெளியீட்டார்.

முதல் நூலை மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன் பெற்று கொண்டார். தமிழ்தேசிய கூட்டமை தலைவர் மீ.தா.பாண்டியன், மலைச்சாமியின் தங்கை ராஜேந்திமதுரை பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேன், அதி தமிழர் பேரவை கல்யாணசுந்தரம், நீல புலிகள் நாகை திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றிய திருமாவளவன்:

* சாதி, இனம், மதம் எனும் வட்டத்தில் சிக்காமல் தனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுங்கள்.

* விமர்சனம் செய்பவர்களை கருத்தில் கொள்ளாமல் கொள்கையில் உறுதியாய் இருப்போம்.

* கூட்டணி கட்சியிலிந்தாலும் கொள்கையில் உறுதியாக இருப்போன்.

* ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தாலும் அணு உலை எதிர்ப்பில் முன்னே செல்வேன்.

தற்போது கள்ளகுறிச்சி பிரச்சினையாக இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருந்து எதிர் பினை தெரிவிப்போம். மதுரையில் தடய அறியல் துறையில் பணியில் சேர்ந்தது முதல் மலைச்சாமி அண்ணனை சந்தித்த மறக்க முடியாது. மலைச்சாமி அண்ணனை சந்திக்கால் இருந்தால்  நான் சாதாரணமான ஆளாகவே இருந்திப்பேன்,

நீண்ட இடைவேளைக்கு பின் இங்கு அனைத்து தலித் அமைப்பினரும் சந்தித்துள்ளோம். நம்மில் சிலர் எதிர்கருத்துகளுடன் பாஜாக வில் உள்ளனர். அவர்களிடம் பொதுநலத்தை எதிர்பார்க்க முடியாது. தனி நலம்தான் உள்ளது. ஜனநாயக முற்போக்கு சக்திகள்தான் சாதியத்தை ஒழிக்கமுடியும் பாஜாகவால் அல்ல.

காங்கிரஸிடம் கருத்து வேற்றுமை இந்தாலும் ஜனநாயகத்தால் இணைந்து பயணிக்கிறோம் என திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் இரட்டை குழந்தைகளுக்கு தமிழரசன், தமிழரசி என பெயர் சூட்டினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top