ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதித்தாலும் அதிலும் சிக்கலா? இந்தாண்டு எப்போது ஜல்லிக்கட்டு?

நம் தமிழர்களின் வீர விளையாட்டாக காணப்படுவது ஜல்லிக்கட்டு விளையாட்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த சூழலில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில சிக்கல்கள் காணப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் அன்று நடைபெறும். இந்த ஆண்டு காணும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. நம் தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை தேதி மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தேதியை ஜனவரி 16ம் தேதியிலிருந்து ஜனவரி 17-ஆம் தேதி திங்கட்கிழமை மாற்ற திட்டம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஊரடங்கில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தால் நிச்சயமாக ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் இல்லாவிட்டால் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment