எட்டு வகையான சொர்க்கம் உங்களுக்கு தேவையா?!

இறைவன் தனது நல்லடியார்களுக்கு தரும் வெகுமதி எதுவென்றால்  “சொர்க்கம்”.  இறைவன் தன் திருமறையில்  அவரவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)என  சொல்லி இருக்கார்.

மனிதனாகப் பிறந்தவனுக்கு ஆசைகள் பலது இருக்கும். இந்த எல்லா ஆசைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைன்ற சிறிய வட்டத்துக்குள் அடைத்துவிடலாம். இந்த ஆசைகளை அனுபவிக்க இந்த பூமி சரியான இடமல்ல!! மறுமையிலே இந்த ஆசைகளை ஒருவன் பூரணமாக அனுபவிக்க முடியும் என்கிறார். அந்த எட்டு விதமான சொர்க்கத்தை ஒருவன் அடைய வேண்டுமென்றால் அவனிடம் ஐந்து விதமான தன்மைகள் இருக்க வேண்டுமாம். அவை…,
1. உலக வாழ்க்கையின்போது அனைத்து வகையான தீமையான காரியங்களில் இருந்தும் தன்னை தடுத்து கொள்ள வேண்டும்.
2. தனது வருமானம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்குள் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் தீயவழிகளில் பொருளீட்டக் கூடாது.
3. இறைவனை வணங்கி வழிபாடு செய்வதில் பேராசை கொள்ளவேண்டுமே தவிர பிற பொருட்கள் மீதல்ல. ஒருவேளை அப்படி ஆசைப்பட நேர்ந்தால் இறைவனிடம் பாவமன்னிப்பு பெறவும், இறைவனின் அன்பை மீண்டும் பெறவும் முயற்சிக்கவும் வேண்டும்..,
4. நல்லவர்களுடன் தோழமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும்.
5. மரணம் என்பது வலி, வேதனை இன்றி அமைதியானதாக இருக்க வேண்டும். யாருக்கும் பாரமாக தொந்தரவாக நமது மரணம் அமைய கூடாது. அத்தகைய மரணத்தை தருமாறு இறைவனை கேட்க வேண்டும். அதோடு நமது பாவங்களை எல்லாம் மன்னித்து சொர்க்கத்தை தருமாறு இறைவனை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டும். இவற்றை பின்பற்றினால் கீழ்க்காணும் எட்டுவிதமான சொர்க்கம் நமக்கு கிட்டும் என திருக்குர் ஆன் சொல்கிறது.

அந்த எட்டு விதமான சொர்க்கம்:
தாருல் ஜலால்: வெண்முத்து, பவளம் ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை…,
தாருஸ் ஸலாம்: சிகப்பு மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை….,
ஜன்னத்துல் மஃவா: பச்சை நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை…,
ஜன்னத்துல் குல்த்: மஞ்சள் நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை…,
ஜன்னத்துல் நயீம்: பளபளக்கும் வெள்ளியால கட்டப்பட்ட மாளிகை…,
தாருல் கரார்: சிவந்த நிறமுடைய தங்கத்தால் கட்டப்பட்ட மாளிகை…,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்: எல்லா விதமான விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்ட மாளிகை, இதனுள் கஸ்தூரி வாசம் நிரம்பி வழியும்
ஜன்னத்துல் அத்ன்: தங்கம் வெள்ளி ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை என இவையே அந்த எட்டுவித சொர்க்கமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews