வைரலாகும் எதிர்நீச்சல் மாரிமுத்து வீடியோ: இறப்பதற்கு முன் வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி பதிவு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இயக்குனர் வசந்தின் உதவியாளராக இருந்து பின்னர் திரையில் கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின்னர் முழுநேர நடிகராக மாறியவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சீரியலில் இவரின் கதாபாத்திரமான ஆதி குணசேகரன் மிகுந்த ஆணாதிக்கம் கொண்ட மனிதராக இவரை காட்டியது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஆதி குணசேகரன் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாார்.

பெண்கள் முதல் இப்போதுள்ள 2K கிட்ஸ் வரை இவரின் பாடி லாங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்புக்கு அடிமையாகினர். அவ்வப்போது வில்லத்தனத்தில் இவர் காட்டும் டைமிங் காமெடிகளும் சோசியல் மீடியாக்களில் வைரலாக உலா வந்தன.

பரபரப்பாக டிவி மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தவர் கடந்த செப்டம்பர் 8-ல் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இவரின் மறைவு பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இவரின் மறைவால் ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார். ஏனெனில் சினிமாக்களில் நடித்து புகழ் பெறாத இவரை எதிர்நீச்சல் என்ற ஒரே சீரியல் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்து வந்தார். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் இவரை பிரபலப்படுத்தியது.

“நான் கிறிஸ்டியன் தான்… ஆனால் நான் இயேசுவை ஃபாலோ பண்ணல” இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்

இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் சீரியலில் வரும் தனது மகள் கேரக்டரான மோனிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் மாரிமுத்துவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மோனிஷாவுக்கு மாரிமுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்று அவர் பேசியதாக இடம் பெறுகிறது. அவர் இறப்பதற்கு அடுத்த சில நாட்களில் மோனிஷாவிற்கு பிறந்தநாள் வந்ததால் மாரிமுத்து தனது சீரியல் மகளின் பிறந்தநாளுக்கு தன்மகளைப் போலவே பாவித்து பிறந்தநாள் வாழ்த்து செய்தியை அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். அதில், “மோனிஷா நீ நல்ல திறமையான . பல கலைகளை கற்றுக்கொண்டு வாழ்வில் அடுத்தடுத்த பணிகளுக்கு முன்னேறி வருகிறாய். நீ சீரியலில் மட்டும் எனது மகள் அல்ல. நிஜ வாழ்விலும் எனது மகள் போன்றவர் தான். வனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று மகிழ்ச்சியாக அந்த பதிவில் மாரிமுத்து பேசியிருப்பது போன்ற வீடியோவை மோனிஷா ஷேர் செய்துள்ளார்.

தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக இடம் பெற்று வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.