நான் ஒண்ணும் குடிச்சிட்டு கார் ஒட்டல.. எதிர்நீச்சல் நாயகி போட்ட பரபரப்பு இன்ஸ்டா பதிவு..

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சீரியைலை 2k கிட்ஸ் முதற்கொண்டு பார்த்து இரசிக்கின்றனர் என்றால் அது எதிர்நீச்சல் சீரியலாக்கத்தான் இருக்கும். சன்டிவியில் தினந்தோறும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஆதிகுணசேகரனாக நடிப்பில் வெளுத்து வாங்கிய மாரிமுத்துவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகியது. இவரின் மேனரிசத்திற்கும், டைமிங் டயலாக்குகளும் மீம்ஸ்களிலும், சோஷியல் மீடியாவிலும் வைரலாக இருந்து வருகிறது.

ஆனால் எதிர்பாரா விதமாக மாரிமுத்து திடீரென மாரடைப்பால் இறந்து விட எதிர்நீச்சல் சீரியல் அந்த இடத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தது. மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து சரசரவென இறங்கியது. இதனால் எதிர்நீச்சல் அடிக்க முடியாமல் இயக்குநர் திருச்செல்வம் தடுமாறிய நிலையில் வேல.ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு மெல்ல மெல்ல தற்போது தத்தித்தடுமாறி டி.ஆர்.பி-யில் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலின் நாயகியான ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதவாது கடந்த சில தினங்களுக்கு முன் தன் ஆண் நண்பருடன் சோழிங்க நல்லூர் பகுதியில் காரில் வரும் போது தவறான ரூட்டில் சென்று விபத்து ஏற்படுத்தியதில் காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்கள் குடிபோதையில் காரை ஓட்டி வந்தார்கள் எனவும் செய்திகள் வலம் வந்தது.

தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..

தற்போது இந்தச் செய்தி குறித்து மதுமிதா விளக்கம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் எனது வீடியோவில் நான் குடித்துவிட்டு காரை ஓட்டினேன் எனவும், அதனால் விபத்து ஏற்பட்டு காவலர் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பாது. விபத்து நடந்தது உண்மைதான். ஆனால் நான் குடிக்கவில்லை. மேலும் காவலருக்கும் சிறிய காயமே ஏற்பட்டது. அவரும் நலமாகத்தான் உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவின் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.