பொங்கல் ரேஸில் பின்வாங்கிய சூர்யா! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் அறிவிப்பு!!

தன் நடிப்பால் என்று தமிழ் மக்களிடையே நடிப்பின் நாயகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. கடந்த ஆண்டு சூரரைப்போற்று, இந்த ஆண்டு ஜெய் பீம் என்று அடுத்தடுத்து மெகாஹிட் திரைப்படத்தை வழங்கிக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா.

எதற்கும் துணிந்தவன்

அதிலும் குறிப்பாக ஜெய்பீம் திரைப்படம் இந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில்  உள்ளனர். இந்த நிலையில் தன் நடிப்பில் உருவாகிக் கொண்டு உள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. அதன்படி சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தினை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தினை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த  திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து சூர்யா படத்தின் வரவால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment