சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை-2022’ வெளியிடப்படும்!!
இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மற்றும் கனிமவளத் துறை சார்பில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக தற்போது சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கோவையில் பாதுகாப்பு, தொழில்கள் தொடர்பாக ஒரு பொது சேவை மையம் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் கூறினார். கோவையில் பலமுனை சரக்குப் போக்குவரத்து பூங்கா ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசினார்.
ஓசூர், குருபரப்பள்ளி தொழிற் பூங்காக்களில் ரூபாய் 20 கோடி மதிப்பில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். தஞ்சை, உதகமண்டலத்தில் சுமார் 70 கோடியில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழகத்தில் அதிவேக ரயில் வழி தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ரூபாய் 3 கோடியில் மேற்கொள்ளப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 3 முதல் 6 சதவீதம் வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்று அவர் கூறினார்/
