Entertainment
அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த ‘காலா’ நாயகி
‘விசுவாசம்’ படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் ‘தந்தை-மகன் என்ற வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தந்தை வேடத்திற்காகத்தான் தற்போதைய வெள்ளைத்தாடி தோற்றம் என்றும் மகன் கேரக்டரில் இளமையாக தோன்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தந்தை கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ‘காலா’ நாயகி ஈஸ்வரிராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மகன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் 80% காட்சிகள் முடிந்துவிடும் என்றும் இதனையடுத்து கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
