கொரோனாவில் இருந்து தப்பிய கோவை டெங்குவிடம் சிக்கல்! நான்கு பேர் பாதிப்பு!!

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தபட்டதாக காணப்படுகிறது. இருப்பினும் நம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக காணப்படுகிறது. இந்த டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசு என்ற கொசு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்கு

பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் மழைக்காலத்தில் அதிகமாக பரவும். ஆங்காங்கு தேங்கியுள்ள தண்ணீர்கள், தேங்காய் சிரட்டை, டயர்களில் கொசு முட்டைகள் அதிகமாகவும் காணப்படும்.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக நான்கு பேருக்கு டெங்கு உறுதியான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் டெங்கு உறுதியான குழந்தை உட்பட 4 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்பு உருவாகியுள்ளது.

மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment